கே.ராஜன் கோரிக்கை ஏற்று தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்…..!

Must read

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை.இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் என் அனைவரும் செய்வதறியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர் .

இதனிடையே பலர் அவர்களால் முடிந்த அளவு நிதியுதவி செய்து வருகின்றனர் .அந்த வகையில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார். ஆனால், பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கவில்லை.

தற்போது இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் என ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனியாக நிவாரணப் பொருட்களை ரஜினி அனுப்பிவைத்து வருகிறார்.

இதனிடையே, தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். அதற்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த். தயாரிப்பாளர்கள்‌ 750 பேருக்கு உதவி செய்வதாக உறுதி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

More articles

Latest article