சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் சென்னை அண்ணா சாலையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அண்ணா சாலை ஸ்தம்பித்துள்ளது. இங்கு ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை காண வருபவர்கள் கழுத்தில் அணியும் வகையில் கோரிக்கை அடங்கிய கருப்பு நிற அட்டையை ரஜினி ரசிகர் மன்றத்தினர் விநியோகம் செய்து வருகின்றனர்.

இது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ரஜினி ரசிகர் மன்றத்தினர் எவ்வித போராட்டத்தையும் நடத்தவில்லை. தற்போது அவர்களும் களத்தில் குதித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.