‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்தப் படம் பாடல் காட்சிகள் படப்பிடிப்புடன் தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

அருகருகே படப்பிடிப்பு நடப்பதால் ரஜினி – அஜித் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.