சென்னை

மிழக மின்வாரியத் தலைவர் மற்றும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராக ராஜெஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அறுதி  பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சியைப் பிடித்தது.   மே மாதம் 7 ஆம் தேதி திமுக ஆட்சியில் மு க ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்றார்.   அதைத் தொடர்ந்து முதல்வரின் தனிச் செயலராக 3 ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.  புதிய தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டுப் பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்

இந்நிலையில் ராஜேஷ் லக்கானி ஐ ஏ எஸ் தமிழக மின்வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் கூடுதல் பொறுப்பாக அவருக்கு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவைத் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

ராஜேஷ் லக்கானி ஏற்கனவே பல அரசுப் பணிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆவார்.  அத்துடன் அவர் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மைச் செயலர் பதவியையும் வகித்தவர் ஆவார்.