“என்னையும் கைது செய்யுங்கள்” மோடிக்கு ராகுல் காந்தி சவால்

Must read

 

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள் அவதியுறும் நேரத்தில், மோடியை விமர்சனம் செய்து பதாகைகள் வைத்த 19 வயது இளைஞர் மற்றும் 61 வயது மரவேலை செய்பவர் உள்ளிட்ட 25 சாமானியர்களை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனை கண்டித்து கொரோனா பெருந்தொற்று நாட்டையே நாசமாக்கி கொண்டிருக்கும் வேளையில், இந்திய மக்களுக்கு தடுப்பூசி வழங்க தவறிய மோடி அரசை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகின் 93 நாடுகளுக்கு 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ததன் மூலம், இந்திய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் அதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மோடி-ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பூசி ஏன் வெளிநாடு சென்றது ?” என்று கேள்வியெழுப்பி உள்ளதுடன்.

என்னையும் கைது செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

More articles

Latest article