ஜெய்ப்பூர்

ழைகளுக்கு ரூ. 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்துள்ளார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். அவர் சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று  தொடங்கி வைத்துள்ளது.

இது குறித்து

“சேமிப்பும் நிவாரணமும் தான் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டின் குறிக்கோளாகும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நாங்கள் நிவாரணம் அளித்துள்ளோம். நாட்டில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்”

என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்..