ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பக்கன் IFS முன்னெடுத்து செயல்படுத்திய சுற்றுசூழல் சார்ந்த திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க மிச்செல் பாடிஸ்ஸே விருது கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குனரும் வனவிலங்கு காப்பாளருமான இந்திய வன அதிகாரி (Indian Forest Officer) பக்கன் ஜகதீஷ் சுதாகர், பாதுகாப்புத் துறையில் பாராட்டத்தக்க பங்களிப்பைச் செய்து, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

யுனெஸ்கோவின் Michel Batisse விருதைப் பெரும் முதல் இந்தியரான இவர் “நிலையான வாழ்வாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சமூக அடிப்படையிலான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” குறித்த தனது ஆராய்ச்சியை மன்னார் வளைகுடா பகுதியில் மேற்கொண்டார்.

மன்னார் வளைகுடாவை பல்லுயிர் பாதுகாப்பு வளையமாக முன்னெடுப்பதில் அளப்பரிய பங்காற்றிய இவரது ஆராய்ச்சியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெற்ற ஜகதீஷ் பக்கனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் பாராட்டியுள்ளனர்.