nehrunamebook01
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்  நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு நீக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நேரு உள்பட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு  இடம் பெற்றிருந்தது. மேலும், சுதந்திரத்திற்கு பின்பு அரசு அமைக்க ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் செய்த செயல்கள் பற்றியும் விரிவாக  இடம் பெற்று இருந்தது.
தற்போது அம்மாநில பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வீர் சர்வார்கர், பகவத் சிங், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரின் வரலாறுகள்  மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால், நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.  மேலும், இந்தியாவின் முதல் பிரதமர்  என்ற அடிப்படையிலும் நேரு பெயர் இல்லை.
அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, ”நான் இன்னும் அந்த புத்தகத்தை பார்க்கவில்லை.  இப்போது பாடத்திட்டங்கள் அனைத்தும் தன்னாட்சி அமைப்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, இதில் மாநில அரசோ, நானோ தலையிட முடியாது” என்று கூறினார்.