சென்னை:

பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என்று ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆங்கில வழிக் கல்வி 8-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘அமைதி வழியில் சென்ற சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். காங்கிரசின் மிதவாத கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆயுத போராட்டம் மூலமே சுதந்திரம் கிட்டும் என முழங்கியவர்களில் திலகரும் ஒருவர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக அரசின் கீழ் செயல்படும் பள்ளி பாடப்புத்தகத்தில் இது போன்ற கருத்து இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.