தஞ்சாவூர்:

ஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கிய நிலையில், இன்று அவரது சிலைக்கு அரசு தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

.

புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவரும்,  தஞ்சையை ஆண்ட மாமன்னனுமான ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா 2 நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் பிறந்த தினமும், முடிசூட்டிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம், ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி,  கவியரங்கம், பட்டிமன்றம், இசை அரங்கம், நாட்டிய அரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.  முக்கிய நிகழ்வான இன்று ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல், யானை மீது திருமுறை வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெறுகிறது.

பின்னர், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் தேவார வீதி உலா நடைபெறும்.

தஞ்சையில் விழாக்கோலம் ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுஜொலிக்கிறது. அந்த மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அதே வேளையில், மகாராஜா  ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்பா சோழகனார்,  உதயலூர் பல்லிபடையில் இன்று ராஜ ராஜ சோழன் சிலை நிறுவப்பட்டுள்ளது.