மும்பை

தா மங்கேஷகர் மற்றும் சச்சின் டெண்டுல்கரை வலியுறுத்தி அரசுக்கு ஆதரவாக டிவீட் போட வைத்ததாக பாஜக மீது ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வராமல் உள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகச் சர்வதேச பிரபல்ங்களான மரியா ஷரபோவா, ரிஹானா உள்ளிட்டோர் டிவீட் வெளியிட்டுள்ளனர்.  மேலும் மியா காலிஃபா போன்ற பலரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.   அவர்களுக்கு எதிராக பாரத ரத்னா விருது பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து டிவீட் வெலியிட்டுள்ளர்.

இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனைத் தலைவரான ராஜ் தாக்கரே, “பாஜக ஆளும் மத்திய அரசு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை வற்புறுத்தி ரிஹானாவுக்கு எதிராக டிவீட் போட வைத்துள்ளது.  இது போல தேசிய அடையாளம் கொண்டோரை அரசு தங்கள் விளம்பரத்துக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது.   அக்‌ஷய் குமார் போன்றோ இந்த பணிக்குப் பொருத்தமாக இருப்பார்கள்.

ஆனால் பாரத ரத்னா விருது பெற்றோரைக் கட்சி விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து ஏதேனும் முக்கியமான விவகாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதனால் பின்னடைவைச் சந்தித்துள்ள லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் ஆகியோர் கிண்டலுக்கு உள்ளாகின்றனர்.  இதற்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.  அவர்கள் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்கள்.  அவர்கள் வேறு யாரோ சொன்னதைப் பின்பற்றி உள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.