சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் தேங்கும் பகுதிக்கு சென்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் கடந்த இரு நாட்கள் பெய்த மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஒட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக, கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் சிக்னல் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்கியது. போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ,இருப்பதாக கூறியவர்,. 20 செ.மீ. மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கவில்லை; தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் நீர் அகற்றப்படும். கடந்த 2 நாட்களில் 11 செ.மீ மழை பதிவாகி இருந்தாலும் கூட தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
20 செ.மீ. மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் நிலையில் நடவடிக்கை. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98% அளவுக்கு நிறைவடைந்துள்ளன. மழைநீர் தேங்கினாலும் அதை உடனே அகற்றுவதற்கான 503 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை எனவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மழையையொட்டி, சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது.
சென்னை முழுவதும் உள்ள மழைநீர் தேங்கிய பகுதிகளில் கிட்டத்தட்ட 90 முதல் 100% வரை அழிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சில பகுதிகளில் தடுப்புகள் இருக்கலாம், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க நிலையை கண்காணிக்க ஆய்வு செய்து வருகின்றனர். தண்ணீர் தேங்கினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட அனைத்து தாழ்வான பகுதிகளிலும் 5HP/7.5HP/10HP/25HP/50 HP மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை! பாதிப்பு குறித்து புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!