சென்னை: தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்  என்றும், தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்‍கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்  காரணமாக, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்‍கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொடைக்‍கானலில் 7 சென்டிமீட்டரும், ராசிபுரம், திருவையாறு, அம்பாசமுத்திரம், பாம்பன் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்‍ கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் .

இதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், சூறாவளிக்‍ காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.