சென்னை: சென்னை மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  அதில், சென்னையில் நாளைமுதல் மழை குறையலாம் என்று தெரிவித்து உள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.  இன்று அதிகாலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று காலை மழை அப்டேட் வெளியிட்டு இருக்கிறார்.  அதில், நிலத்தை நெருங்கி மேகங்கள் நிலைத்திருக்கும் சென்னைக்கு மிக நீண்ட மழை நாள் வரப்போகிறது. இன்று வடசென்னையை விட தென்சென்னை சிறந்து விளங்கும். புறமாவட்டங்களில் மேகங்கள் மாறலாம், Tvmalai, villupuram, Ranipet, போன்ற கடற்கரைக்கு அருகில், புதுவை, கடலூர் இன்று இணையலாம், இன்று இல்லாவிட்டால் நாளை மழை பெய்யும். மழைக்கால தரவுகள் தொகுக்கப்பட்டு விரைவில் போடப்படும். கத்திவாக்கம் 161 மி.மீ. மழையில் முதலிடம். தொடர்ந்து பெரம்பூர். நற்செய்தி என்னவென்றால் சென்னையில் இன்று மற்றும் நேற்றை விட நாளை முதல் மற்ற மாவட்டங்களுக்கு மழை மாறி படிப்படியாக குறையும்.

ஏற்கனவே பதிவிட்டுள்ள டிவிட்டில்,  சென்னை சென்னையில் மழை அளவு பல இடங்களில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளது. அதாவது பல இடங்களில் 200 மிமீ வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று இரவு சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. வட சென்னை, வடமேற்கு சென்னையில்தான் மிக அதிக கனமழை பெய்து வருவதாகவும் அவர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். நேற்று இரவு அவர் குறிப்பிட்டது போலவே வடசென்னை பகுதிகளில் மிக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை சென்னையில் நேற்று இரவு முழுக்க பெய்த மழை தற்போது கொஞ்சம் விட்டுள்ளது. அதிகாலையில் கொஞ்சம் மழை அளவு குறைந்து உள்ளது.  ஆனால் 10 மணிக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.