புதுடெல்லி:

2 பயணிகள் ரயிலை இயக்கும் பணியில் தனியார் பங்கேற்கும் வகையில் ரயில்வே துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.


தற்போது சுற்றுலா மற்றும் ரயில் டிக்கெட் வழங்கும் பணியை ரயில்வேயின் ஐஆர்சிடிசி எனப்படும் செய்து வருகிறது.

இதன்மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், சோதனை அடிப்படையில் 2 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறைந்த நெரிசல் மற்றும் சுற்றுலாத் தளங்கள் வழியாக செல்லும் 2 ரயில்களை தனியார் இயக்குவதற்கான டெண்டர் அழைப்பை ரயில்வே வெளியிடுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, 2 ரயில்களையும் இயக்கும் பணியை ஐஆர்சிடிசி என்று அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திடம் கொடுக்கப்படவுள்ளது.

டிக்கெட் மற்றும் ரயில் சேவையை ஐஆர்சிடிசி கவனிக்கும். இதன்மூலம் கணிசமான லாபம் கிடைக்கும் என்று ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

தனியாருக்கு கொடுத்ததும் அதனை கவனிக்கும் பொறுப்பு குத்தகை தொகையை தரும் ஐஆர்சிடிசியிடம் ஒப்படைக்கப்படும்.

அதன்பின்னர், டெண்டர் மூலம் தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து 2 பயணிகள் ரயில்களையும் இயக்கும் பணி ஒப்படைக்கப்படும்.

இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே வாரிய தலைவர் கடிதம் மூலம் விகே.யாதவ் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், ” குறிப்பிட்ட வழித் தடங்களில் 2 பயணிகள் ரயில்களை ஒப்படைக்கும் பணியை டெண்டர் மூலம் தனியாருக்கு அளிப்பது குறித்து தொழிற்சங்கங்களுடன் ரயில்வே ஆலோசனை நடத்தும்.

ரயில் டிக்கெட் புக் செய்யும்போது கிடைக்கும் மானியத்தை விட்டுத் தருமாறு பெரிய அளவில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.

மானியத்துடன் அல்லது மானியம் இல்லாமல் பயணிகள் டிக்கெட் பெற வாய்ப்பு தரப்படும். மானியம் அளிப்பதால் ரயில்வேக்கு 53% கட்டணம் மட்டுமே வருவாயாக வருகிறது.

நாடு முழுவதும் 7 ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை கார்பரேட் மயமாக்கும் உத்தேசமும் ரயில்வேயிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.