இரயில்வே விண்ணப்பங்களில் இனி திருநங்கையருக்கும் இடம்

Must read

இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்ய பயன்படும் விண்ணப்பங்களில் ஆண், மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

irctc

இதுவரை ரயில்வே முன்பதிவுகளில் திருநங்கையருக்கு அவர்களது பாலினத்தை குறிப்பிடும்படியான வசதி அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். எனவே அவர்கள் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்ய வசதி செய்யப்பட வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
அவர் ஏற்கனவே இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இது சம்பந்தமாக, ரயில்வேதுறையை அணுகுமாறு உத்தரவிட்டனர். அதன்படி அவர் இரயில்வே துறைக்கு இந்த கோரிக்கையை வைத்தவுடன் அது உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு ஆண், மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க முடிவு செய்துள்ளது.
இனி ரயில்வே இணையதளம் மற்றும் விண்ணப்ப படிவங்களில் மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்வதற்கு வசதி செய்யப்படும் என்று தெரிகிறது.

More articles

Latest article