பிரதமரின் நோட்டு தடையின் எதிரொலியாக சாமானிய மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பணத்துக்காக என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் மக்கள் அனுதினமும் அல்லாடி வருகின்றனர்.

puransharma

இது எந்த அளவுக்கு போயிருக்கிறதென்றால், ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்காக ஒரு ஏழை குடும்பத்தலைவர் கருத்தடை செய்து கொள்ளும் நிலையில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் ந்கரை சேர்ந்த புரன் சர்மா என்பவர் தன் குடும்ப தேவைக்கு பணம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த நிலையில் அருகாமையில் குடும்ப கட்டுப்பாடு முகாம் நடந்து வருவதாகவும். தானாக முன்வந்து குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு ரூ.2000 தரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதைக்கேட்டு பணத்துக்கு வேறு வழியே இல்லாத நிலையில் புரன் சர்மா அங்கு போய் தனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.