ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சிம் கார்டை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.  அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச அழைப்பு அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் 3 மாதத்திற்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது.  ஆனால், ஜியோ நெட்வொர்க்கில் பிரச்னை இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த சலுகை மேலும் மூன்று  மாதங்களுக்கு,  நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
0
இந்நிலையில் சலுகை காலம் முடிந்த பிறகு மாதம் 499 ரூபாயை கட்டணமாக ஜியோ நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைஃப் (LYF) மொபைல் ஃபோனை பயன்படுத்துவோருக்கு கட்டணம் இதைவிட குறைவாக நிர்ணயிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.