“நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ரூபாய் நோட்டு தடை செய்வதற்கு ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்க மாட்டேன். இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பேன். அவர் என் பேச்சை கேட்காதிருந்தால் என் பதவியை தூக்கி எறியவும் தயங்கியிருந்திருக்க மாட்டேன்” என்று ரூபாய் நோட்டு தடை பற்றி முன்னாள் நிதியமைச்சரும் பொருளாதார வல்லுநருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
chidambaram
பிரதமர் நரேந்திரமோடியின் அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகளின் நிலைப்பாடு பற்றி ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் மற்றும் ஒருங்கிணைந்த ஜனதாதள் கட்சியின் சார்பாக பவன் வர்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியை பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் நடத்தினார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “இந்த முடிவு மக்களை பிச்சைக்காரர்கள் போல பணத்துக்காக அலைந்து திரியவும், கடன்காரர்களாகவும் ஆக்கியிருக்கிறது. இது நேர்மையற்ற ஒரு முடிவு” என்று தெரிவித்தார்.