குழந்தைகளின் ரயில் சலுகைகளை மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
train ticket for kids no berth featurted
விமானங்களில் குழந்தைகளுக்கு அரை-டிக்கெட் வசதி கிடையாது. முழுக் கட்டணம் செலுத்தி ஒரு இருக்கையை பெறவேண்டும். ஆனால், இரயிலில், பல ஆண்டுகளாக 5 முதல் 12 வயதுக் குழந்தைகளுக்கு அரை-டிக்கெட் பணம் செலுத்தினாலே பெர்த் எனப்படும் படுக்கை தனியாக ஒதுக்கப்பட்டு வந்தது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, ரயில்வே சீர்திருத்த மசோதாப் படி, வருகின்ற ஏப்ரல் 22 முதல்,  குழந்தைகளுக்கு இரயிலில் வழங்கப் பட்டு வந்த இந்தச் சலுகை வழங்கப் பட மாட்டாது என அறிவித்துள்ளது.
சராசரியாக ஒரு ஆண்டில் இரண்டு கோடி குழந்தைகள் இரயிலில் அரை டிக்கெட்டில் பயணிக்கின்றனர். அதனை பெரியவர்களுக்கு ஒதுக்கினால் ₹ 550 கோடி வருவாய் ஈட்ட முடியும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.
 
ரயில்வே அமைச்சர் பயணிகள் கட்டணத்தை உயர்த்த முடியாது என முடிவு செய்தபடியால், பல்வேறு வகைகளில் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் முயற்சியாக இந்த முடிவு அமைந்துள்ளது.
கடந்த டிசம்பரில், அரை டிக்கெட்டிற்கு பெர்த் வழங்குவதை நிறுத்திய இந்திய ரயில்வே,  முழு டிக்கெட் கட்டணம் செலுத்தினால் பெர்த் இல்லையெனில் அரை டிக்கெட் எடுத்து பெர்த் இல்லாமல் பயணம் செய்யலாம் எனவும். முன்பதிவு செய்யும் போது இந்த வாய்ப்பு தேர்வு செய்யப்படவேண்டும் என்றும் குழந்தைகள்-டிக்கெட் விதிமுறையை மாற்றி இருந்தது.  தற்பொழுது ஏப்ரல் 22  முதல் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவுள்ளது.
ஊழியர்களின் ஓய்வூதியத்தில் வரி வசூலிக்க முடிவெடுத்தது, அதற்கு எதிர்ப்பு வந்தவுடன்,  சேப்பிற்கான வட்டிவிகிதங்களைக் குறைத்தது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாகக் குறைந்தாலும், வரி மீது வரி சுமத்தி பெட்ரோல் டீசல் விலையை அவ்வப்போது விலையேற்றி வருகின்றது.
நகை வியாபாரத்தின் மீது ஒரு சத வரிவிதிப்பிற்கே நகை வியாபாரிகள் ஒரு மாதமாக வேலைநிறுத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஐஐடி கவிக் கட்டணத்தை ₹ 90,000ல் இருந்து 2,00000 மாக உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் தான், குழந்தைகளுக்கு இந்த ரயில் சலுகை ரத்து அறிவிப்பு வந்துள்ளது.
குழந்தைகள் வீதிக்கு வந்து போராட மாட்டார்கள் மேலும் அவர்களுக்கு தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமையில்லை ஆதலால் அவர்களுக்கு வழங்கப் படும் சலுகையை எந்தக் குற்றவுணர்வுமின்றி நிறுத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது போல் உள்ளது இந்தச் சலுகைப் பறிப்பு.
வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குகளை வாங்கி ஜெயித்துவிட்டு, தற்பொழுது மத்திய வர்க்கம் பயணிக்கும் இரயிலில் குழந்தைகளின் கட்டணத்தை இரட்டிப்பாக்கி உள்ளதன் மூலம் மத்திய வர்க்கத்தினரை மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளது மத்திய அரசு.