பஞ்சாபில் இன்று தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் ராகுல்!

Must read

அமிர்தசரஸ்,

ட்டசபை இடைத்தேர்தலுக்கான, தேர்ல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி.

நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி, 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார்.

அதன் ஆரம்பகட்டமாக பஞ்சாபில் 3 நாள் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

பஞ்சாபில் தற்போது ஷிரோன்மணி அகாலி தளம் – பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நடைபெறுகிறது.

தற்போதைய பஞ்சாப் சட்டப் பேரவை. பதவிக்காலம் மார்ச் 17, 2017 வரை உள்ளது.

117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  பிப்ரவரி 4 அன்று   நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 11ந்தேதி நடைபெறும் என்றம்  தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் நடைபெற குறைவான நாட்களே இருப்பதால், தற்போது பஞ்சாபை ஆளம்  அகாலி தளம் – பாஜ கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 3 நாட் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் மஜிதா பகுதியில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தேர்தல் சிறப்புரை ஆற்ற இருக்கிறார். அடுத்து பஞ்சாப் முதல்வர்  பிரகாஷ் சிங் பாதலின் லம்பி தொகுதி, துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் ஜலலாபாத் தொகுதி ஆகியவற்றில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து ஜனவரி 30ந்தேதி, பிரசாரத்திற்காக  கோவா மாநிலம் செல்கிறார் ராகுல்காந்தி.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article