டில்லி

களிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார்.

நேற்று மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதாவின் மீதான விவாதம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற ஒத்துழைக்க வெண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். 

இன்றைய விவாதத்தில் காங்கிரஸ் தலைவ ராகுல் காந்தி,

”இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது.  மகளிருக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் அதிக அதிகாரம் கிடைத்தது. ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்காதது வருத்தமளிக்கிறது.

ஓபிசி இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டமன்றம் நீதித்துறைகளில் கடைபிடிக்க முடிகிறதா? எதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 8 ஆண்டுகள்?  பாஜக அதானியின் முறைகேடுகளை மறைக்க வெவ்வேறு உத்திகளைக் கையாள்கிறது. நாடு ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது”

என்று கூறினார்.

ராகுல் காந்தியின் உரையை எதிர்த்து பாஜகவினர் கூச்சலிட்டதால் அமளி ஏற்பட்டது.