கோட்டா

பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கறி உள்ளார் 

மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாகாலாந்து, ராகுல் காந்தியின் யாத்திரை அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாகத் தொடர்ந்து வருகிறது.

தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  இந்த யாத்திரையின் போது கோட்டாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அவர் தனது உரையில்,

“பிரதமர் மோடி காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் தொடர்புடைய மசோதாவை ரத்து செய்துள்ளார். மக்கள் அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள். 

தற்போதைய பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் நாடு முழுவதும் வெறுப்பைப் பரப்பி வருகிறது” 

எனக் கூறி உள்ளார்.