நான் ஒரு சிவ பக்தன் : ராகுல் காந்தி அறிவிப்பு

Must read

பெசார்ஜி, குஜராத்

ராகுல் காந்தி தாம் ஒரு சிவ பக்தன் என தெரிவித்துள்ளார்

குஜராத் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நிகழ்ந்து வருகிறது.   அதை ஒட்டி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.   அவர் செப்டம்பர் மாதம் துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு போய் விட்டு வந்தார்.   நேற்று பதானில் உள்ள வீர மகாமாயா ஆலயம், வாராணாவில் உள்ள கொடியார் மா ஆலயம், மற்றும் மேசானா மாவட்டத்தில் இருக்கும் பேசார்ஜியில் உள்ள பகுசார் மா ஆலயத்துக்கும் சென்றார்.

ராகுல் காந்தி இது போல கோயில்களுக்குச் செல்வது இந்துக்களின் ஓட்டுக்களை பெறத்தான் என பா ஜ க வினரால சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி, “நான் சிவ பக்தன்.  யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்.   உண்மை என்ன என என் மனதுக்குத் தெரியும்” என கூறி உள்ளார்.   தொடர்ந்து அவர் குஜராத்தில் உள்ள கோயில்களுக்கு செல்வதையும்  ஒவ்வொரு நாளும் பரப்புரையை ஆரம்பிக்கும் முன்பு ஒரு கோயிலுக்கு சென்று வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article