அரியானா தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடிய ராகுல்! வைரல் வீடியோ

Must read

சண்டிகர்:

ரியானா தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  இடையில் சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி அரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பணி நிமித்தமாக ஹெலிகாப்டர் மூலமாக மஹேந்திரகருலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந் தார். ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது வானிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து, அவசரமாக ஹெலிகாப்டர் ரெவாரி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில்  அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அப்போது, அந்த கிரண்வுடில் அந்த பகுதியைச் சேர்ந்த லோக்கல் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். ராகுலும் அவர்களோடு இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். சிறுவர்களும் ஆவலோடு ராகுலுக்கு பந்து வீசி ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள்  அவரை காண கூடினர். ராகுல் சிறுவர்கள் உடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அசந்துபோய் நின்றனர்.

வானிலை சரியானவுடன் மக்களிடம் விடைபெற்று கொண்டு மீண்டும் புறப்பட்டார் ராகுல் காந்தி.

ராகுல் சிறுவர்களுடன்  கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ….

Video courtesy: ANI

More articles

Latest article