மனாமா,

உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பான ( GOPIO -Global Organization of People of Indian Origin) நடத்தும் விழாவில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்க பஹ்ரைன் சென்றுள்ள  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பஹ்ரைன் இளவரசரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார். அப்போது அவருக்கு நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தை பரிசளித்தார்.

பஹ்ரைனில் உள்ள  அரசர் அரண்மனையான  வாடி அரண்மனையில்  பஹ்ரைன் இளவரசர்  ஷேக் காலித் பின் ஹமத் அல் கலீபாவை சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள்.

அவருடன், விளையாட்டு சம்பந்தமாக ராகுல்ரகாந்தி  விவாதித்தாகவும்,  இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை மேம்படுத்த வேண்டும் என்றும் பஹ்ரைன் இளவரசிடம் ராகுல்  கூறினார்.

அதைத்தொடர்ந்து பஹ்ரைன்  இளவரசருக்கு,  இந்தியாவின் முதல் பிரதமரும், ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவுமான ஜவஹர்லால் நேரு, ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததற்காக, சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையில் இருந்து எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை பரிசளித்தார்.

அதைப்பெற்றுக்கொண்ட பஹ்ரைன் இளவரசர் ராகுலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பு  ஏற்பாடு செய்துள்ள விழாவில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். இந்த விழாவுக்கு  50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர்  கலந்துக் கொள்கின்றனர்.

முன்னதாக பஹ்ரைன் வந்த ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக இந்திய வம்சாவளியினர் விழாவை தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள  இந்திய வம்சாவளி தொழில் அதிபர்களையும் ராகுல் சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.