பெகாசஸ் குறித்து ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை

Must read

டில்லி

பெகாசஸ் அலைப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இஸ்ரேல் நாட்டு பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் அலைப்பேசிகளை ஒட்டுக் கேட்டதாகச் செய்திகள் வெளியாகின.   இது மத்திய அரசை உலுக்கி உள்ளது.  இது குறித்து நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் அமளிகள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து  விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில்  விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன.  மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை.  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இதனால் முடங்கி உள்ளது.   எனவே இது குறித்த நடவடிக்கைகளை எடுக்க இன்று ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டம் டில்லி அரசியல் சாசன கிளப்பில் நடைபெற உள்ளது.  கூட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு எதிர்க்கட்சியினருக்கும் ராகுல் கந்தி அழைப்பு விடுத்துள்ளார்.   இந்த கூட்டத்தில் பங்கேற்க திருணாமுல் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் அக்கட்சியினர் காங்கிரஸ் விடுக்கும் அழைப்புக்களைத் தவிர்த்து வருவதால் அவர்கள் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

 

More articles

Latest article