காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

லடாக் பகுதிக்கு செல்ல இருக்கும் அவர் இரு தினங்களுக்கு முன்பு பாங்காங் ஏரி பகுதிக்கு பைக்கில் சென்றிருந்தார்.

ராகுல் காந்தி தனது கே.டி.எம். 390 பைக்கை இயற்கை எழில் மிகுந்த பாங்காங் பகுதியில் ஒட்டிச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

ராகுல் காந்தியின் ஒவ்வொரு அசைவையும் விமர்சித்து வரும் பாஜக அமைச்சர்கள் அவர் பைக் ஒட்டிச் சென்றது வைரலானதை அடுத்து அதையும் விமர்சனம் செய்தனர்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ராகுல் காந்தி, லடாக் வரையில் இன்று தனது பைக் பயணத்தை மீண்டும் துவங்கினார்.

லடாக் செல்லும் வழியில் கார்டுங்-லா பகுதியை சென்றடைந்த ராகுல் காந்தி அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் பாதுகாப்பு படையினருடன் அங்கிருந்த நினைவுச் சின்னம் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.