சென்னை:

ன்று மாலை நாகர்கோவிலில்  காங்கிரஸ் கூட்டணி தலைவர்களை அறிமுகப்படுத்தி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார்.  அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தி.மு.க-காங்கிரஸ் கூட் டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் ராகுல், மதிய உணவை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து  ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார்.

நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடை பெற உள்ளது.

இந்த  தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட ூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளனர்.