சென்னை:
ன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்க உள்ள ராகுல்காந்தி, அதற்காக இன்று மாலை சென்னை வருகிறார்.

மக்களிடையே  ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நாட்டு மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு புத்துணவை ஊட்டவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 150 நாட்கள் குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவரது பாத யாத்திரை, வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. ராகல் நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

இதில் பங்கேற்க ன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்க உள்ள ராகுல்காந்தி, அதற்காக இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சென்னையில் இரவு தங்கும் ராகுல் காந்தி, நாளை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பி வருகிறார்.

காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.