ந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் திடிராவிட். இவர் இந்திய அணியில் இருந்து விலகி,   தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

டிராவிட் பயிற்சியின் கீழ் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக டிராவிட்டை  இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு டிராவிட்டும் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க கூடிய அனில் கும்ப்ளே இயக்குனராவார் என்றும் கூறப்படுகிறது.

இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை ராகுல் டிராவிட்டும், ஆலோசனை வழங்கும் பொறுப்பை கும்ப்ளேவும் கவனிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகர்களாக டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ் லட்சுமன் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.