ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தி பந்துவீச்சளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

தற்போது, அவருடன் மற்றொரு இந்திய பந்துவீச்சாளரான ஜடேஜாவும் இணைந்து முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளரான  தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த சில மாதங்களாக டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில், பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா, இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

அதே டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், அவருடன் ஜடேஜாவும் இணைந்து முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன், பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் நீடித்துவந்த கேப்டன் விராட் கோலி, தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.