கை தட்டுவதும் டார்ச் அடிப்பதும் கொரோனா தடுப்புக்குத் தீர்வு அல்ல : ராகுல் காந்தி

Must read

டில்லி

பிரதமர் மோடியின் தீபம் மற்றும் டார்ச் ஏற்றும் அறிவிப்புக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அறிவித்துள்ளது

இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று பிரதமர் மோடி வரும் 5 ஆம் தேதி இரவு  விளக்குகளை அணைத்து தீபம் மற்றும் டார்ச்சுகளை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

9 நிமிடங்களுக்கு இந்த தீபங்களை வீட்டின் உள்ளே இருந்தவாறே வைத்திருக்கச் சொல்லிக் கூறி உள்ளார்.

இதற்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில்

“கை தட்டுவது, டார்ச் அடிப்பதும் கொரோனாவை தடுப்பதற்கான தீர்வல்ல.

மருத்துவ உபகரணங்களையும் பரிசோதனை கருவிகளையும் அதிகப்படுத்துவதே தீர்வு”

எனப் பதிந்துள்ளார்.

More articles

Latest article