நியூயார்க்

மெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர்  பிரிவு இறுதிச்  சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார்.

டென்னிஸ் விளையாட்டின் உலக அளவுப்போட்டிகளான கிராண்ட் ஸ்லாம்  போட்டிகள் ஆண்டுக்கு நான்கு முறை நடைபெறும்.   இதில் அமெரிக்க ஓப்பன டென்னிஸ் போட்டியும் ஒன்றாகும்.   இந்தப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.   இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் மற்றும்  ரஷ்யாவின் டேனில் மெதவ்தேவ் ஆகியோர் மோதினர்.

தரவரிசைப் பட்டியலில் ரஃபேல் நடால் இரண்டாம் இடத்தில்  உள்ளார்.  டேனில் மெதவ்தேவ் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.  இவர்கள் இருவரும் மோதிய இறுதிச் சுற்றை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.   ஆர்தர் ஆஷஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் முதல் இரு செட்களில் ரஃபேல் நடால் திறமையாக விளையாடி முன்னிலையில் இருந்தார்.

அடுத்த இரு செட்களில் டேனிலின் அபார ஆட்டத்தால் அவரும் இரு செட்களின் முன்னிலை அடைந்தார்.  இறுதி மற்றும் ஐந்தாம் சுற்றில் இருவரும விளையாடியது ரசிகர்களை கடும் பரபரப்பில் ஆழ்த்தியது.   ரஃபேல் நடால் இந்த ஐந்தாம் சுற்றில் முன்னணியில் இருந்து வெற்றி பெற்றார்.

ரஃபேல் நடால் ரஷ்யாவின் டேனிலை 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்னும் செட்க் கணக்கில் தோற்கடித்தார்.    இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடால் தந்து 19 ஆம் கிராண்ட் ஸ்லாம் போட்டி வெற்றியை அடைந்துள்ளார்.   அதைப் போல்  அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் வெற்றி பெறுவது 4 ஆம்  முறை ஆகும்.