மைதானத்தில் தொலைந்த குழந்தை: ஆட்டத்தை நிறுத்திய நடால்

Must read

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஆடிக்கொண்டிருந்த கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது மைதானத்தில் இருந்த குழந்தை ஒன்று திடீரென்று தொலைந்து போனதால் அதன் தாய் பதற்றமடைந்து அழத்தொடங்க அதைப்பார்த்த ரஃபேல் நடால் மேற்கொண்டு விளையாட மனமின்றி போட்டியை நிறுத்திவிட்டார்.

nadal

உடனே ஒட்டுமொத்த மைதானத்தின் கவனமும், கேமராக்களும் தாயையும் குழந்தையையும் நோக்கி திரும்ப சில நிமிடங்களில் தாயும் குழந்தையும் அழுதபடி ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போய் கரங்களை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதன் பின்னரே ஆட்டம் தொடர்ந்தது.
மனிதாபிமானத்துடன் செயல்பட்டு போட்டியை நிறுத்ததிய ரஃபேல் நடால் எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

More articles

Latest article