விஷாலுக்கு ராதிகா சவால்!

Must read

ரத்குமாரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய புதிய பொறுப்பாளர்களுக்கு குறிப்பாக சங்கத்தின் செயலாளர் விஷாலுக்கு  சவால் விட்டிருக்கிறார் நடிகை ராதிகா.0
நடிகர் சங்க தலைவராக சரத்குமார் இருந்தார். இவரும் முக்கிய பொறுப்பில் இருந்த ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரும் இணைந்து பெரும் ஊழல் செய்ததாக விஷால்- கார்த்தி அணியினர் குற்றம்சாட்டினர். பிறகு நடந்த தேர்தலில் விஷால் – கார்த்தி அணி வென்றது. சரத் அணி தோற்றது.
இந்த நிலையில் சரத் உள்ளிட்டோர் தற்காலிகமாக சங்கத்தில்இருந்து நீக்கப்பட்னர். சமீபத்தில் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் இவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை செயலாளர் விஷால் கொண்டுவந்தார். அனைவரின் ஏகோபித்த ஆதரவோடு இந்த முடிவு எடுக்கப்ப்டடதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சங்க செயலாளர் விஷாலுக்கு நடிகை ராதிகா ட்விட்டர் மூலம் சவால் விட்டுள்ளார்.
அந்த பதிவில் ராதிகா ,’ இதை டிவிட்டரில் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இது தான் என் அறிக்கை. சங்க பொருளாளர் கார்த்திக்கு ஊழலை நிரூபிக்க வேண்டும். இது என்னுடைய சவால் ” என்று  தெரிவித்துள்ளார்.
 
 

More articles

Latest article