nadigar_sangam_2586734fநேற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு சென்னை தி.நகர் அபிபுல்லா தெருவில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் மொத்தம் ஏழு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது அது பின் வருமாறு :-
* சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அதை பற்றி விளக்கம் கேட்டும் எந்த விதமான விளக்கமும் கொடுக்காததால் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தை விட்டு நிரந்தரமாக நீக்குவது.
* சங்கத்துக்கு தொடர்பில்லாத 67 உறுப்பினர்களுக்கு அவர்களின் அட்டையை புதுபிக்க பத்திரிக்கை விளம்பரம் கொடுப்பது. அதன்பின் அவர்கள் புதுபிக்க தவறவிட்டால் அவர்களை நீக்குவது.
* சங்க உறுப்பினர்களுக்கான ஒய்வூதியத்தை உயர்த்துவதோடு வயது வரம்பும் தளர்க்கப்படுகின்றது.
* சங்கத்தின் கட்டிடம்கட்ட சிஎம்டிஏ அனுமதி கிடைத்ததும் கட்டிடப்பணி தொடங்கப்படும், 3ஆண்டுக்குள் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
* சங்க அறக்கட்டளையை திருத்தம் செய்து தங்களை நிரந்தர அறங்காவலராக நியமித்து கொண்ட முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை அறக்கட்டளையிலிருந்து நீக்குவது.
* சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் சங்க விதிகளுக்கு எதிராக நடப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது.
* சங்கத்தின் இருப்பில் இருப்பது 8.5 கோடி ரூபாய் மேலும் நிதி திரட்ட படம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயற்சிப்பது.
இவ்வாறு இந்த அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.