பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராதே’. ‘வெடரன்’ என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.

மே 13 அன்று ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். விமர்சன ரீதியாகக் கடுமையாக சாடப்பட்டாலும் படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஜீ5 தரப்பு அறிவித்துள்ளது.

இதுதவிர திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் சில அயல் நாடுகளில் திரையரங்கிலும் படம் வெளியாகியுள்ளது. அதில் முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ரூ.1.55 கோடி, நியூஸிலாந்தில் ரூ. 27.81 லட்சம், அமெரிக்கா ரூ.1.20 கோடி, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.8.89 கோடி என மொத்தமாக ரூ.13.03 கோடியைப் படம் வசூலித்துள்ளது.