டெல்லி:

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை உச்சநீதி மன்றம் டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு  நடைபெற்ற தமிக சட்டமன்ற தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்  இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதுதொடர்பான வழக்கில், கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண  சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டு, வாககுகளை எண்ணியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மறு வாக்குப்பதி வின் முடிவுகளை வெளியிட உச்சநீதி மன்றம் தடை விதித்திருந்தது. தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இறுதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து,   இறுதி விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும், டிசம்பர் 11 ஆம் தேதி வரை, ராதாபுரம் தேர்தலின் மறுவாக்குப்பதிவு முடிவை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.