prakash_liveday
கோவை:
டிகர் பிரகாஷ்ராஜ் மீது கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காவல்துறையில் புகார் அளத்துளஅளார்.
இணையதளத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகர்கள் ராணா மற்றும் பிரகாஷ்ராஜ் தோன்றுகின்றனர். இதைக் குறிப்பிட்டு கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோவன். ராணா மற்றும் பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், “ சூதாட்டத்திற்கு இணையான ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிகர்கள் ராணா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். அந்த விளம்பரத்தில் ஒரு பெரிய குடும்பமாக இணைந்து ரம்மி விளையாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கருதப்படும்  விளையாட்டை இவ்வாறு ஊக்குவிப்பது தவறு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.