சென்னை,

“ஜெயலலிதா இருந்தபோது நடத்த முடியாத ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்போது ஓபிஎஸ் முதல்வ ராக இருந்தபோது நடந்திருக்கிறது!” என ஆர்.எஸ். எஸ். மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதா இருக்கும் வரை எங்களால் ஒரு பேரணி கூட நடத்த முடியவில்லை. ஆனால், தற்போது,ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருப்பதால், பேரணியை வெற்றிகரமாக நடந்தி இருக்கிறோம். ஓபிஎஸ்சின் அணுகுமுறை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணி  15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்றது.  எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து,  சிந்தாதிரிப் பேட்டை வரை இந்த பேரணி நடைபெற்றது. சுமார் 1000 தொண்டர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி, ராமானுஜர், கருகோவிந்த் சிங், டாக்டர் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்டதாக ஆர்எஸ்எஸ் இயக்கம் தெரிவித்து உள்ளது.

ஆர்எஸ்எஸ்சின் ஓபிஎஸ் புகழ்பாடும் செயல் அரசியல் விமர்சகர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேரணி குறித்து ஆர்.எஸ். எஸ். அமைப்பின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் என். சடகோபன் கூறியதாவது,

தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் வந்த பின் நாங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்படுவாக நினைக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்த முடிகிறது.

அவேவேளையில், ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, நீதிமன்றம் பேரணி நடத்த அனுமதி கொடுத்தால்கூட அவர் அனுமதிக்க மாட்டார். உடனடியாக அதற்கு தடை விதித்து விடுவார் அல்லது கோர்ட்டு மூலம் தடை பெற்றுவிடுவார்.

அதே வேளையில், திமுக ஆட்சியாக இருந்தால், முதல்வராக இருந்த கருணாநிதியையோ அல்லது மூத்த அமைச்சர்களையோ நேரடியாகச் சந்தித்து முறையிட்டு இலகுவாக அனுமதி பெற முடியும்.

ஆனால், ஜெயலலிதாவை நெருங்குவது மிகவும் கடினம். அவரை சந்திக்க அனுமதி வாங்கவே முடியாது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால், சில காரணங்களால் எங்களால் பேரணி நடத்த முடியவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வெற்றிகரமாக நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.