சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இணையதள வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

18வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  வாக்குச்சாவடியில் வரிசை நிலையினை, அதாவது வாக்காளர்கள் கூட்டம் எப்படி உள்ளது என்பதை,  இணைதயதளம் மூலம் தெரிந்து கொள்ளும்  வசதியை தேர்தல் ஆணையம்  அறிவித்து உள்ளது,

அதன்படி, https:// erolls.tn.gov.in/Queue என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம்.

இந்த தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளது.

வாக்களர்களே உங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். இளந்தலைமுறையினர், முதல்தலைமுறையினர், தங்களது வாக்கின, படித்த, எதிர்கால திட்டமிடுதல், நாட்டு நலம் போன்றவற்றை கருத்தில்கொண்டு தங்களது வாக்கினை செலுத்துங்கள்.

உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்பதை நினைவில் காண்டு, உங்கள் வாக்கு! உங்கள் எதிர்காலம்! உங்கள் ஓட்டு.. !! உங்கள் உரிமை  என்பதை சூளுரை,  100% நேர்மையாக வாக்களியுங்கள்…

வாக்காளர்களே ‘வோட்டர் அடையாள அட்டை இலையா?’ ஆதார் உள்பட 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்..