சென்னை: குவாரி டெண்டரின்போது நடைபெற்ற  திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து  நவம்பர் 8ந்தேதி பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

பெரம்பலூர் கல்குவாரி டெண்டரின் போது அரசு அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.,வினரை கண்டித்தும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை கோரியும் வரும் 8ம் தேதி அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், நெல்லை சித்ரவதை – கண்டனம் நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது, இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல். ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், போலீசார் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்குவாரி ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை! 12 திமுகவினர் கைது…