ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய கத்தார்!

Must read

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்திய கத்தார் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

football

ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இந்த போட்டியில் வழக்கத்தை விட 24 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தபப்ட்டன. இதில் வெற்றிபெற்ற முதல் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் வெற்றிபெற்ற ஈரான், கத்தார், ஜப்பான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதன் முதல் போட்டியில் ஜப்பான் மற்றும் ஈரான் அணிகள் மோதின. ஜப்பானை எளிமையாக வீழ்த்திய ஈரான் அணி இறுதி சுற்றுக்கு முதலில் முன்னேறியது.

அதனை தொடர்ந்து அபுதாபியில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் கத்தார் மற்றும் யுஏஇ அணிகள் எதிர்கொண்டன. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கத்தார் அணியின் கோக்கி 22நிமிடத்திலும், அலி 37வது நிமிடத்திலும், அல் ஹய்தாஸ் 80வது நிமிடத்திலும், இஸ்மாயில் 90வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோலி அடிக்க யுஏஇ அணி வீரர்கள் முயன்றும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்ற கத்தார் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

More articles

Latest article