ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு!

Must read

2020ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

icc

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் 7 மைதானங்களில் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரி பங்கேற்கும் 16 அணிகள் 45 போட்டிகளில் விளையாட உள்ளன. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்கும் இந்த தொடர் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளன.

தற்போது இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் எந்தெந்த அணிகளுடன் மோத உள்ளன என்ற பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அக்.24ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதேபோன்று பெண்கள் உலகக்கோப்பைகான டி20 போட்டிகள் பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 அணிகள் விளையாட தகுதி பெற்றுள்ளான.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற வில்லை. ஏ மற்றும் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள்:

‘ஏ’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தகுதிபெறும் அணிகள்.

‘பி’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதிபெறும் அணிகள்.

பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி அக்.24ம் தேதி தென் ஆப்ரிக்காவுடனும், அக்.29ம் தேதி ஏ பிரிவில் தகுதிப்பெறும் அணியுடனும், நவம்பர் 1ம் தேதி இங்கிலாந்து அணியுடனும், நவ.5ம் தேதி பி பிரிவில் தகுதி பெறும் அணியுடனும், நவ.8ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோத உள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடாதது இதுவே முதல்முறையாகும்.

முதலில் தகுதி பெற்ற சூப்பர் 12 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள்ம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்னதாக நடந்து முடிந்த உலக கோப்பை முதல் தொடரில் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து 2009ம் ஆண்டு பாகிஸ்தானும், 2010ம் ஆண்டு இங்கிலாந்தும், 2012ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளும், 2014ம் ஆண்டு இலங்கையும், 2016ம் ஆண்டும் மீண்டும் மெற்கிந்திய தீவுகள் அணியும் உலகக் கோப்பையை கைப்பற்றிய உள்ளன.

More articles

Latest article