சென்னை:  இன்று காலை சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனே தரையிறக்கப்பட்டது.

சென்னை இன்டர்நேஷனல் விமான முனையத்தில் இருந்து சுமார் 139 பயணிகள் மன்றும் விமான பணியாளர்களுடன் கர்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம், கத்தார் தலைநகர் தோகாவுக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, விமான இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமான கண்டறிந்தார். இதையடுத்து, 0/விமானி உடனே விமானத்தை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து விமான பயணிகள் தற்போது ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.