சென்னை:
மிழ்நாடு, புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.