காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.