ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாம் பதக்கம் பெற்றுத் தந்த சிந்துவுக்கு பாராட்டு மழை

Must read

டோக்கியோ

லிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கல பதக்கம் பெற்றதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி வி சிந்துவும் சீனாவின் ஹி பி ஜியாவும் மோதினர்.   மிகவும் தீவிரமாக இந்த போட்டி நடந்தது.    முதல் செட்டில் சிந்து 21:13 என எளிதாக வெற்றி  பெற்றார்.   இரண்டாம் செட்டில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது.

புள்ளிகளில் சிந்து முன்னிலை பெற்றாலும் ஹி பி ஜியாவும் கூடவே தொரந்து நெருங்க் வந்தார்.  இரண்டாம் செட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என கணிக்க முடியாத நிலை நிலவியது.  ஆனாலும் இறுதியில் வேக வேகமாக் புள்ளிகளை குவித்த சிந்து 21:15 என்னும் செட்க் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

தங்கம் வெல்லுவார் என எதிர்பார்த்த சிந்து அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியதால் வெறும் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளார்.  இது இந்தியாவுக்கு இரண்டாம் பதக்கமாகும்.  சென்ற முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெண்கலப்பதக்கம் பெற்றிருந்தார்

இதையொட்டி தொடர்ந்து இரு ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சாதனையை சிந்து படைத்துள்ளார்.  பிவி சிந்துவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இதைப் போல் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி, உள்ளிட்ட பலரும் பி வி சிந்துவை பாராட்டி வருகின்றனர்.

 

More articles

Latest article