அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக இருக்க பாதுகாப்பு அமைச்சர் ஷோய்ஜ் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் ஜெராசிமோவ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய ராணுவ வரையறைப்படி அணு ஆயுதம் மற்றும் மரபு சார்ந்த பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்காக ஒரே மாதிரியாக பயன்படுத்த இந்த தடுப்புப் படையினருக்கு அதிகாரம் உள்ளது.

உக்ரைனில் நான்காவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்கள் நாட்டு ராணுவ தளவாடங்களை உக்ரைனுக்கு உதவ அந்நாட்டில் குவித்து வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதியுடன் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புடின் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.